Tamil

வலைப்பதிவு நடவடிக்கை தினம் 08

வலைப்பதிவு நடவடிக்கை தினம் ஒரு வருடாந்த இலாப நோக்கற்ற நிகழ்வாகும். இதன் நோக்கு வலைப்பதிவர், பொட்காஸ்டர்ஸ், வீடியோகாஸ்டர்ஸ் போன்றோரை ஒரு குடையில் கீழ் கொண்டுவந்து ஒரே நாளில் ஒரு விடயதானத்தைப்பற்றி எழுதவைப்பதாகும். இதன் மூலம் உலகின் பல பாகங்களில் இருந்து பல்வேறு பட்ட குரல்களில் வேறு பட்ட கருத்துக்களை ஒரு தலைப்பு பற்றி விவாதிக்க வைப்பதுடன், அந்த தலைப்பு பற்றி ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாகும்.

வலைப்பதிவு நடவடிக்கை தினத்தில் பங்கு பெற விரும்பினால் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ செய்யலாம்.

அக்டோபர் 15 பதிவிடுக

உங்களிடம் ஒரு வலைப்பதிவு இருந்தால், அல்லது நீங்கள் ஒரு பொட்காஸ்டர் அல்லுது வீடியோகாஸ்டர் என்றால் இந்த வலைப்பதிவு நடவடிக்கையில் உங்களையும் ஈடுபடுத்திக்கொள்ளலாம். ஆகஸ்ட் 15 இல் இருந்து அக்டோபர் 15 வரை வலைப்பதிவர்கள் தங்கள் வலைப்பதிவை பதிவுசெய்யுமாறு வேண்டப்படுகின்றனர். பதிவு செய்வதன் மூலம் எத்தனை பதிவர் பங்கெடுக்கின்றனர் மற்றும் எவ்வளவு வாசகர்கை சென்றடைகின்றது என்று அறிந்து கொள்ளலாம்.

அக்டோபர் 15ம் திகதி, இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் வலைப்பதிவர், பெட்காஸ்டர்கள், வீடியோகாஸ்டர்கள் வறுமை பற்றி ஒரு பதிவிடவேண்டும். அந்த தினத்தில் வலைப்பதிவு மூலம் சம்பாதித்த பணத்தை தரும நிறுவனங்களுக்கு நீங்கள் வழங்கலாம்.

நாங்கள் வலைப்பதிவர்களை பதிவிடும் போது அது அந்த வலைப்பதிவின் சாதாரண இடுகைகளுடன் தொடர்பாக இருக்குமாறு வேண்டுகின்றோம். இதன் மூலம் பதிவு பல்வேறு கோணங்களில் அலசப்படக்கூடியதாக இருக்கும்.

உங்கள் வலைப்பதிவைச் சேர்க்குக

அன்றைய தின வருமானத்தை நன்கொடையாக்குக

வலைப்பதிவு நடவடிக்கை தினத்தில் உங்கள் வலைப்பதிவில் விளம்பரம், அபிலியேட், நன்கொடை அல்லது பொருட்கள் விற்பனை போன்ற முறைகளில் சம்பாதிக்கும் பணத்தை வறுமையை நீக்க போராடும் தரும நிறுவனங்களுக்கு கொடுக்குமாறு வேண்டுகின்றோம்.

வலைப்பதிவு நடவடிக்கை தினம் பின்வரும் தரும நிறுவனங்களை ஆதரிக்கின்றது:

த குளோபல் fபண்ட்

வறுமைக்கான காரணங்கள் பல. குளோபல் பண்ட் எயிட்ஸ், கசம் மற்றும் மலேரியாவிற்று எதிராகப் போராடுகின்றது. இதன் மூலம் வறுமையின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 2008 இல் த குளோபல் பண்ட், வலைப்பதிவு நடவடிக்கை தினத்தின் உத்தியோக பூர்வ தரும நிறுவனமாக கணிக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்திற்கு நன்கொடையை வழங்குமாறு வலைப்பதிவர்களை நாங்கள் வேண்டுகின்றோம்.

அறிவுரை:
வலைப்பதிவு நடவடிக்கை தினத்தில் சேர்ந்த பணத்தில் பெறுமதியை அறிந்து கொள்ள உங்கள் நன்கொடையை change.org ஊடாக வழங்குமாறு வேண்டுகின்றோம். நன்கொடை செலுத்துக

Kiva.org

கிவா என்பது உலகின் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட நபர் க்கு நபர் நுண் உதவி வலைப்பதிவு. இதன் மூலம் வளரும் நாடுகளில் உள்ள தொழில் தொடங்குனர்கள் பயனடைகின்றனர். இந்த தொழில் முனைவோர் தாம் பெற்ற கடனை பயன்படுத்தி வியாபாரத்தை ஆரம்பித்து தங்களையும் தங்கள் சமூகத்தையும் வறுமையில் இருந்து மீட்க உதவுகின்றனர். It doesnÕt take much and the majority of loans are fully repaid!

அறிவுரை:
வலைப்பதிவு நடவடிக்கை தினத்தினால் பெறப்பட்ட பணத்தை அடையாளம் காண எங்கள் முகவரியான central@blogactionday.org எனும் முகவரியை referrerஆக வழங்கவும்.. இப்போதே கிவா.காம் சென்று கடனுதவிசெய்க.

ஏனைய தரும நிறுவனங்கள்

உங்கள் நன்கொடையை வேறு தரும நிறுவனங்களுக்கு கொடுக்க விரும்பினால் உங்களை அவ்வாறே செய்யுமாறு வேண்டுகின்றோம். நீங்கள் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டை அனுப்பினால் அதை நாங்கள் செலுத்திய பணத்துடன் கூட்டி மொத்தமாக இந்த நடவடிக்கை மூலம் எவளவு சம்பாதிக்கப்பட்டது என்று அறிந்துகொள்வோம். இது பற்றி எங்களுக்கு central@blogactionday.org எனும் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புக.

இந்த முயற்சி பற்றி உலகறியச் செய்க
வலைப்பதிவு நடவடிகை தினம் நீங்கள் இம் முயற்சிபற்றி பரப்பும் செய்தியிலேயே தங்கியுள்ளது. உங்களிடம் வலைப்பதிவு அல்லது இணையத் தளம் ஒன்று இருந்தால் பின்வரும் சேவைகளைச் செய்யலாம்: உங்கள் வலைப்பதிவில் இந்த நிகழ்வு பற்றி ஒரு பதிவை இடுவதன் மூலம் மற்றய பதிவர்களை இந்த நிகழ்வில் பங்கெடுக்க ஊக்குவியுங்கள். வலைப்பதிவு நடவடிக்கை தினம் பற்றிய வீடியோவை உங்கள் தளத்தில் இடலாம். உங்கள் வலைப்பதிவில் வலைப்பதிவு நடவடிக்கை தினத்திற்கான பனர்கள் ஏதாவது போட்டு வையுங்கள். மின்னஞ்சல் இட்டோ அல்லது சாதாரணமாகவோ மற்றவர்களிடம் இந்த வலைப்பதிவு நடவடிக்கை தினம் பற்றிக் கூறுங்கள்.!